XtGem Forum catalog

ஃபிரான்ஸில் பர்தா அணிந்தவர்களை விசாரித்த பெண் போலிஸார் இஸ்லாத்தை ஏற்றனர்!

27/12/2012



ஃபிரான்ஸில் பர்தா அணிந்தவர்களை விசாரித்த பெண் போலிஸார் இஸ்லாத்தை ஏற்றனர்!                                         

ஃபிரான்சிலிருந்து வெளி வரும் 'லீ மாண்டே' எனும் இதழுக்கு பேட்டியளித்த

ஃபிரான்ஸின் உள்துறை அமைச்சர் கடந்த ஏப்ரலில் முகத்திரை அணிவதற்கு தடை விதித்து சட்டம் இயற்றப்பட்ட பிறகு 237 முஸ்லீம் பெண்கள் முகத்திரை அணிந்தாலும் வெறும் 6 பெண்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகதெரிவித்தார். மேலும் அவ்வாறு முகத்திரை அணிந்த முஸ்லீம் பெண்களை விசாரித்த ப்ரான்ஸின் பெண் காவல்துறையினரில் கால்வாசி பெண் காவலர்கள் இஸ்லாத்தை தழுவியது தமக்கு ஆச்சரியமளிப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

இத்தடையானது முஸ்லீம் பெண்களின் மத உரிமையை பறிப்பதாக எதிர்ப்பாளர்களும், ஃப்ரான்ஸின் மதசார்பின்மையை பாதுகாப்பதாகவும் இஸ்லாமிய தீவிரவாதத்தை முளையிலேயே கிள்ளி எறிய கூடியது என்றும் இச்சட்டத்தை ஆதரிப்பவர்கள் கூறுகின்றனர்.

முஸ்லிம் பெண்கள் பர்தா அணிவது ஃபிரான்ஸில் தடை செய்யப்படவுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் சென்ற வருடம் அறிவித்தது. இதன் எதிரொலி ஆபத்தாகயிருக்குமெனப் பலர் அரசை எச்சரித்தபோதும் ஃபிரான்ஸ் அரசாங்கம் இதை அறிவித்தது. பிரான்ஸில் மிக நீண்டகாலமாக இவ்விடயம் விவாதிக்கப்பட்டும் சர்ச்சைக்குள்ளாகியும் வந்தது.

முஸ்லிம் அமைப்புகள் உள்ளிட்ட சில நிறுவனங்கள் ஃபிரான்ஸில் இந்த நகர்வை வன்மையாகக் கண்டித்தன. வீதிகள், கடைகள், பொதுச் சந்தைகள், பொது இடங்களில் முஸ்லிம் பெண்கள் பர்தா அணிவது சட்ட ரீதியாக தடை செய்யப்பட்டது. பெண்கள் பர்தா அணிவது ஒரு சமூகம் தன்னைத்தானே மூடிக்கொள்வது போன்றது. ஏனைய கலாசாரங்களைக் கேலி செய்யும் வகையில் இது உள்ளதாக இச்சட்டத்தை கொண்டுவந்த முன்னால் ஃபிரான்ஸ் ஜனாதிபதி நிக்கலஸ் சர்கோரிஸி தெரிவித்திருந்தார். ஆனால் இன்று ஒரிஜினல் ஃபிரென்சுப் பெண்களே அதை அணியும் காலம் வந்து கொண்டிருப்பது பர்தாவின் முக்கியத்துவத்தை மேற்கத்திய உலகம் புரிந்து கொள்ளும் காலம் நெருங்கி விட்டதையே பறைசாற்றுகிறது.

Back to posts
Comments:

Post a comment